Author : RAJESHKUMAR
ISBN No : 9789387894297
Language : English
Categories : TAMIL BOOKS
Publisher : WESTLAND PUBLICATIONS
Currently Unavailable - Still you can add in CART.
நான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், உங்க ஸ்விஸ் பேங்க் அக்கொளண்ட்ல போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்டு இருக்கும்."அரேபிய ரோஜா (Arabia Roja)மஹிமா உடம்பின் சகல திசைகளிலும் அதிர்ந்துபோனவளாய் கணினித் திரையில் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்த வாசகங்களை நிலைத்த விழிகளோடு பார்த்தாள். மீண்டும் படித்தாள். மஹிமா! துபாயில் ஒரு அபாயம் உதட்டில் புன்னகையோடும் கையில் ‘பொக்கே’வோடும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விபரீதத்துக்கு விசா எடுக்காதே!"ரெடிமேட் சோர்க்கம் (Readymade Sorgam)போலீஸ் கமிஷனர் அன்புச்செழியன் அமைச்சர் இன்பமணியனின் பி.ஏ. செல்வத்தை ஒரு ஆச்சரியப் பார்வையால் நனைத்துக் கொண்டே கேட்டார். என்ன செல்வம்... அமைச்சருக்கும் முன்னாள் கலெக்டர் பரசுராமுக்கும் என்ன பிரச்சனை...? எதுக்காக கல்யாணுக்கு டாக்டர் பாலாஜி கொடுக்கப் போகிற மிட் ப்ரெய்ன் ஆக்டிவேஷனை தடுத்து நிறுத்தச் சொல்றார்...?"